சென்னை: தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையயும்  திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அந்த பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம்” “கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள் காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி 2021 முதல் தற்போது வரை சுமார் 17 லட்சம் பேருக்கு பட்டா வழங்கி யுள்ளோம் என்று கூறினார்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் வளாகத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை 400 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களுடன் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார்.

அதன் பிறகு பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம்” “கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள் காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி 2021 முதல் தற்போது வரை சுமார் 17லட்சம் பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம் என்று கூறினார்.

இந்த  விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் காமராஜ், பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி, பல்லாவரம் சேர்மன், இ.ஜோசப் அண்ணாதுரை, த.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி பாலத்தில் இருந்து தாம்பரம் அரசு மருத்துவமனை வரை வழியெங்கும் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதே போல் பல்லாவரம் மேடைக்கு வரும் போது கண்டோன்மெண்ட் குன்றத்தூர் சாலை சந்திப்பு முதல் பழைய டிரங்க் சாலை வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.