சென்னை: வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தில் மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து பயன்பாட்டை தலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்த,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா செல்லும் வகையில்,  மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சொகுசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர், அதனுள் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.