சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும் , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் .

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை திறந்து தார்.
தொடர்ந்து பெரியமேட்டில், ரூ. 3.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார். கொளத்தூரில் கட்டப்படும் ரத்த சுத்திகரிப்பு, மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம், முழு நேர நூலகம், ஐ.ஏ.எஸ். பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே கட்டப்பட உள்ள பெரவள்ளூர் புறக்காவல் நிலையம் கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, சென்னை பெரியமேட்டில் பதிவுத்துறை சார்பில் ரூ.3.86 கோடியில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.