சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழும்பூரில் அமைய உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்திற்கு அடிக்கல்  நாட்டியதுடன், 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் தொடர்ந்து  கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில்  இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,   பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களின் நிறைவு பெற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து,  சென்னை எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் ரூ.15.43 கோடியில் கட்டப்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறையில் மற்றும் நாகப்பட்டினத்தில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 327 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 2,404 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 58 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணைகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் என 10 முடிவுற்ற திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார்.

பால்வளத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரை கிராமத்தில் 15 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தும்,

திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2024-2025ம் நிதியா

ண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புற கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா 2.5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 62.50 கோடி ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 12 கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை வழங்கினார்.

மேலும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.