சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் 11மணி அளவில் திறந்து வைத்து, பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலைய கல்வெட்டு, கலைஞர் சிலையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கோயம்பேடு பகுதி, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் 14 நடைமேடைகளுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த இந்த பேருந்து நிலைய பணிகள், தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு, திமுக அரசு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எனப் பெயர் சூட்டியதுடன், அங்கு கருணாநிதி சிலையையும் நிறுவி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, புதிய பேருந்துகளை கொடியசைத்து இயக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திறந்த வைத்ததுடன், வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, தாமோ அன்பரசன், மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா. திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்பட உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 840 தனியார் பேருந்துகளுடன் 2,130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திறப்பு விழா கண்ட பேருந்து நிலைய கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
https://patrikai.com/%f0%9d%90%8a%f0%9d%90%9a%f0%9d%90%a5%f0%9d%90%9a%f0%9d%90%a2%f0%9d%90%a0%f0%9d%90%a7%f0%9d%90%9a%f0%9d%90%ab-%f0%9d%90%82%f0%9d%90%9e%f0%9d%90%a7%f0%9d%90%ad%f0%9d%90%9e%f0%9d%90%a7%f0%9d%90%9a/