சென்னை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்கா கட்டிடம் மற்றும் திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில், 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 1.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள  திட்ட மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடங்கள், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தொடர்ந்து,  “AG&P பிரதம்” நிறுவனம் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிலையத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பின்னர், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.