சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி 754 புதிய வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்படி, ரூ.171 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறை கட்டடங்கள், 17 ஆய்வக கட்டடங்கள் மற்றும், 17 ஆய்வக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்,.
Patrikai.com official YouTube Channel