சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ. 30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் .
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 7 பதிவு மண்டலங்களில் ரூ. 30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி, மன்னார்குடி – ஹரித்ராநதி கோயில் குளம் ஆகியவை ரூ. 27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது துறை அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமைச்செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.