சென்னை : முனைவர் பட்டம் பெற்று, அதே கல்லூரியில்  உதவி பேராசிரியராக பணி வாய்ப்பு பெற்றுள்ள திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை முனைவர் என்.ஜென்சி, அந்த கல்லூரியின் ஆங்கில உதவி பேராசிரியராக நியனம் செய்யப்பட்டுள்ளார். இதை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின்  அந்த திருநங்கை ஜென்சிக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது   எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி,” ‘டாக்டர் ஜென்சி’ என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்” என்றார்.