சென்னை: 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், மாநில உரிமைகளை மதித்து நடப்பீர்கள். ஜனநாயகத்தை பாதுகாப்பீர்கள் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்

18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்து 240 இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.   பிடித்துள்ளது. அந்த வகையில் பெரும்பான்மை பலத்தோடு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். நேற்று ( ஜுன் 9ந்தேதி)  இரவு குடியரசு தலைவர் மாளிகையில் பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  தொடர்ந்து, மோடியுடன் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா ஜெயராமன், ஜெய்சங்கர் உள்பட  பாஜக மற்றும்  கூட்டணி கட்சியை சேர்ந்த  72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில்,   தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். பிரதமராகத் தாங்கள். அரசியலமைப்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உண்மையாகப் பணியாற்றுவீர்கள் என்றும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைத் தொடர்வீர்கள் என்றும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலை முன்னெடுப்பீர்கள் என்றும், மாநில உரிமைகளை மதித்து நடப்பீர்கள் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பீர்கள் என்றும் நம்புகிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.