சென்னை:  தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில் பராமரிப்புக்கு அரசு மானியத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். அதுபோல, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர் நல வாரியத்திற்கு வழங்கினார்கள்.

தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு அரசு மானியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி உதவி வழங்கினார்.  அதன்படி, 88 திருக்கோயில்களில் நிர்வாகத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே-விடம் காசோலையை வழங்கினார்.