சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் 2 நாள் பயணமாக இன்று சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சேலம் ஆட்சியர் அலுவலகத்தில்  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் தொழில் துறை மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி & நாமக்கல் மாவட்டங்களின் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் இன்றும் நாளையும் முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்று காலை சேலம் வந்ததும் ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஆய்வு : அதனை தொடர்ந்து சேலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு நவீன பேருந்து நிலையத்தை முதல்வர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன் பிறகு, தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில்  சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 அதில் அந்தந்த மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் தெறிந்து கொண்டார்.   அந்த மாணவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கிறதா? சிறப்பு முகாம்கள் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றார்கள் என்பது குறித்தும் ஆலோசித்தார்.

அதனை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாய சங்கத்தினர், தொழில் முனைவோர் அகியோரிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் கேட்டறிந்து ஆய்வு செய்ய உள்ளார்.

தொடர்ந்து, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி & நாமக்கல் மாவட்டங்களின் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

முன்னதாக, ஓமலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், அங்கு அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பு பதில் பெற்றவர், அங்கு வந்த பொதுமக்களிடமும் புகார் மனு மற்றும் அதன்மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து சேலம் சென்றபோது, அவருக்கு வழிநெடுகிலும் மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலும் வணக்கம் தெரித்தனர்.

இதையடுத்து சேலத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பஸ் நிலையத்தை பார்வையிட்டார்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேலம் பழைய பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பஸ் நிலையம், வணிக வளாகம், நேரு கலையரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து இரண்டு அடுக்கு பஸ் நிலையத்திற்குள் சென்று மாடிபடிகள் வழியாக ஏறி, ஒவ்வொரு தளமாக நடந்து சென்று என்ன? என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்வையிட்டார். தூண்கள் மற்றும் ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்டவை எவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்வையிட்டார்.

இது தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர். அப்போது பஸ் நிலையத்தில் மேலும் என்ன? என்ன? பணிகள் செய்யப்பட உள்ளன?, அவை எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து இரண்டு அடுக்கு பஸ் நிலைய பணிகள் முழுவதும் முழுமையாக செய்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் விடவேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து பழைய பஸ்நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஈரடுக்கு பஸ் நிலைய பணிகள் 95 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளிப்புற பகுதிகளில் பெயிண்ட் அடிக்கு பணி, மேல் மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.