சென்னை: ஓய்வுபெறும் சென்னை  உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரிக்கு, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஒட்டலில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு  விருந்து வைக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் முனிஷ்வர்நாத் பண்டாரி வரும் 12ந்தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து, அவருக்கு தமிழக முதலமைச்சர் விருந்து வழங்கி மரியாதை செய்கிறார். முனிஸ்வர்நாத் பண்டாரி, இதுவரை எந்தவொரு வழக்கிலும், தமிழகஅரசுக்கு விரோதமாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு  ஐடிசி கிராண்ட் சோழாவில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார்.