சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், அங்கு நடைபெற்று வரும் நிவாரண பணிகள், பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் வசிக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.2ஆயிரம் நிதி மற்றும் கால்நடைகள், பயிர்களுக்கான இழப்பீடும் அறிவித்து உள்ளார்.
அதன்படி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம்.
புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம்,
வெள்ளத்தில் உயிரிழந்த எருது, பசுக்களக்கு ரூ.37,500 வழங்கவும்,
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும்,
கோழி இறந்திருந்தால் தலா ரூ 100 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார்.