சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 15நாள் பயணமாக வரும் 27ந்தேதி வெளிநாடு புறப்படுகிறார். முதல் பயணமாக ஸ்பெயின் செல்கிறார்.

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது, அமைச்சர் டி.ஆர்பி. ராஜா, மேலும்முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளதாக அறிவித்தார்.

அதன்படி, வரும் 27ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வெளிநாடு புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் பயணமாக, ஜனவரி 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். வரும் 27ஆம் தேதி ஸ்பெயின் புறப்படும் முதலமைச்சர் மீண்டும் பிப்.12ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.  சுமார் 15 நாட்கள் அவரது வெளிநாடு சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது,  அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல  நாடுகளுக்கும் முதல்வர் பயணிக்கவுள்ளார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் செல்கின்றனர். இந்த வெளிநாடு பயணத்தின்போது, தமிழ்நாட்டிற்கு மேலும்  முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்நிறுவனங்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.