சென்னை :
“தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைதி – வளர்ச்சி- செழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்” என்று தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
dc-Cover-irbehlppc54h0lsi83dkvb1vs2-20160501104942.Medi
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலையில் துவங்கியது. கவர்னர் ரோசய்யா  தனது உரையில் தெரிவித்ததாவது;
“முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் இரண்டாவது  முறை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கிட முதல்வர் உறுதி பூண்டுள்ளார். இதன்படி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அமைதி – வளர்ச்சி- செழிப்புக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்.
ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தியுள்ளார்.  500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
லோக் அயுக்தா அமைக்கப்படும். சைபர் குற்றங்கள் தடுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை தமிழர் பிரச்னை, முல்லை பெரியாறு திட்டம், காவிரி ஆணையம் ஆகியவற்றில் உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று கவர்னர் ரோசய்யா  பேசினார்.