புதுச்சேரி,

புதுச்செரி மாநிலத்தில் கந்துவட்டி வாக்குபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடடினயாக அவரை சிறையில் அடையுங்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கந்துவட்டி வாங்குவோர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுவையில் கந்துவட்டி வாங்குவோர் குறித்து புகார் வந்தால் உடடியாக அவர்களை கைது செய்து  சிறையில் அடைக்க காவல்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

[youtube-feed feed=1]