சென்னை:
பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலமானார்.

இந்நிலையில், பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]