சென்னை:
ரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழக அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இன்றும், நாளையும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, அரசின் திட்டங்கள், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் நிலை குறித்து, அனைத்து துறை செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

நகராட்சி, நீர் வளம், மின்துறை, பொதுப்பணி, தொழில், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்றும், நாளை கூய்ட்டுறவு மற்றும் உணவு, பள்ளிக்கல்வி ,உயர் கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலன் உள்ளிட்ட துறை‌ செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வீடியோ பிரசெண்டேஷன் முறையில் திட்டங்களின் நிலை குறித்து துறை செயலாளர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.