சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 10 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் நீடித்து வருகிறது. சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், 11 மாவட்டங்களில் பரவல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக மக்களின் வசதிக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் மேலும் 10 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சுமார் 1.77 கோடி மதிப்பில் 10 ஆம்புலன்ஸ்களைத் கரூர் வைஸ்யா வங்கி வழங்கியது. இந்த புதிய 10 ஆம்புலன்ஸில், 8 ஆம்புலன்ஸ்கள் மலைப்பகுதியில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா சுப்பிரமணியன். எ.வ.வேலு மற்றும் உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.