சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கினார்.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
எழும்பூர் மற்றும் வட சென்னையில் உள்ள பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என் நேரு, தலைமைச் செயலர் இறயைன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் சென்றனர். மழை பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்ததுடன், மக்களின் குறைகளைக் கேட்டார்.
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிய உணவை வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel