சென்னை:
.சி.ஆர். ரோட்டில் சிகப்பு கலர் டீசர்டில், தலையில் ஹெல்மெட்டுடன் சைக்கிள் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுபவர்.

தினமும் உடற்பயிற்சி செய்து, நடைபயிற் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். தினமும் அதிகாலையிலேயே சித்தரஞ்சன் சாலைகளில் அவரை பார்க்க முடியும்.

இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அடிக்கடி சைக்கிளில் செல்வது பிடிக்கும். சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் அவர் முன்பு அடிக்கடி சைக்கிளில் செல்வதை பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் முதல்வரான பின்னர் ஏராளமான பணி சுமைகள் காரணமாக அவர் முன்பு போல் அவர் அடிக்கடி வெளியில் வருவது இல்லை. குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவிய பின்னர் உடல் நலத்தை பேணுவதற்காக வெளியில் செல்வது கிடையாது. கடுமையான கொரோனா தொற்று அவரது நடவடிக்கையால் தமிழகத்தில் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இயல்பான நிலையை சென்னை எட்டி உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சைக்கிளில் சாதாரணமாக சென்று கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரை சுற்றி சிலர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை பொதுமக்கள், மற்றும் நடைபயிற்சி சென்று பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். நேராக முதல்வரை தேடி சென்று பேசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சைக்கிளில் சென்றபடியே இருந்தார். வயதான பெண்மணியை பார்த்து சைக்கிளில் நிறுத்திவிட்டு இறங்கி போய் பேசினார். அவரை நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து பொதுமக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சிவப்பு கலர் சட்டையில் ஹெல்மட் அணிந்தபடி செல்வது முதல்வர் தான் என்பது தெரிந்து காரில் சென்ற பலரும் கார்களை மெதுவாக ஓட்டியபடி முதல்வரை பார்த்து கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஸ்டாலினின் வருகையால் கிழக்கு கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது.