சென்னை: நிதியமைச்சர் பிடிஆர், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவித்தார். வெளிநாடு செல்லும் முதல்வருக்கு மூத்தஅமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலுரை வழங்கினார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது,  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் பாராட்டு தெரிவித்தார். அதுபோல, விவசாயிகளின் மைந்தனாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறினார்.

முன்னதாக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்வர், புதிய முதலீடுகளை ஈர்ப்பார் என்று நம்பக்கை தெரிவித்ததுடன், கருணாநிதி இன்று இருந்திருந்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் என்று கூறி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.