சென்னை:
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் – பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடையும் – ரம்ஜான் அன்று அவர்கள் அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கும், முதல்வரும், கொளத்தூர் தொகுதி பேரவை உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது இல்லத்தில் – கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் – பரிசுப் பொருள்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 2200 பேருக்கு கொளத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகள், அவர்கள் இல்லங்களுக்குச் சென்று புத்தாடையையும் பரிசுப் பொருள்களையும் வழங்க உள்ளனர்.</p>
இன்று காலை, முதல்வர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உடனிருந்தார்.