சென்னை: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து…தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு… மொழியை காக்க போராட்டம் நடத்தியது திராவிட இயக்கம் தான் என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு விழாவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ‘ஃபெட்னா’ அமைப்பின் 35ஆவது ஆண்டு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினார். அப்போது, ‘உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் தமிழினம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்கிறார்கள்.தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் தாய் வீடு. உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழும் இனம் தமிழினம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.
1938முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான். தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான் தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு தான். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு, ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி என கொண்டு வந்தது திமுக ஆட்சி தான்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு. தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரை துடைக்க குறிக்கோள் கொண்டுள்ளது திமுக அரசு. ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயராக இருந்தது.
ஓராண்டாக ஒரு இயக்கத்தின் பெயராக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயங்களில் அன்னைத்தமிழ் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. திராவிடம் சென்ற சொல்லை திட்டமிட்டு தான் குறிப்பிட்டு வருகிறேன். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு.
உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு. வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி, புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்க. தமிழினத்தை மேம்படுத்தும் எண்ணத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டிற்கு எதிரான நபர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களை இனங்கண்டு கொள்வோம்.
தமிழர்களை பிளவுபடுத்தும் கருவியாக மதம் இருப்பதை தான் எதிர்க்கிறோம். சாதியையும், மதத்தையும் தாண்டி மொழியால் இணைக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு. இறை நம்பிக்கை என்பது அவரவர் உரிமை. அதில் தலையிட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.