சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுலா மற்றும் பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்ந்த இரண்டு நூல்களை வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ‘Forts Of TamilNadu- A Walk Through என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூல் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நாட்டார் தெய்வங்களின் வரலாறு தொடர்பான ஆங்கில புத்தகமும் முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள “FORTS OF TAMILNADU – A WALK – THROUGH” என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை விளக்கிடும் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய “Folk Deities of Tamil Nadu” என்ற நூலினையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.