அரியலூர்: அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரியலூர் விழாவில் 57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ரூ.78 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும்
  • கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்
  • அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் காரிடார் திட்டம்

2நாள் சுற்றுப்பயணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்றுள்ள முதலமைச்சர் அங்கு பல்வேறு நலதிட்டப் பணிகளை தொடங்கி வைத்து பல கோடி மதிப்பிலான பணிகளுக்க அடிக்கல் நாட்டியும் வருகிறார். நேற்று திருச்சி, பெரம்பலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு அரியலூர் வந்தடைந்தார். அங்கு இந்திய ஹாக்கி வீரர் கார்த்திக் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை வழங்கினார்.

இந்த நிலையில், இன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதன்படி  இன்று காலை,  அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  . ரூ.78 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து  57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அரியலூர் கொல்லா புரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் உரையாற்றினார். அmப்போது,  டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்டம் அரியலூர். அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம் என ஸ்டாலின் கூறினார்.

அரியலூர் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படுகிறது என பெருமிதப்படுத்தியதுடன்,   அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.  அரியலூர் மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிகமுள்ளன. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என தொல்லியல் பொக்கிஷங்கள் அரியலூரில் நிறைந்துள்ளன என ஸ்டாலின் கூறினார்.

மேலும், ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்றவர்,  அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம். பல்வேறு பெருமைக்குரிய மாவட்டம் அரியலூர் மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை நேரில் சென்று வழங்கினேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.