சென்னை: தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட மகிந்திரா நிறுவனத்தின் மின்சார. கார் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகிந்திரா நிறுவனத்தின்கார் தொழிற்சாலையில், மின்சார கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு தயாரிக்கப்பட்ட மகிந்திரா எஸ்.யூ.வி. மின்சார கார் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மின்சார காரை கண்டு பெருதம் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். காரின் சிறப்பம்சங்கள் குறித்து முதலமைச்சரிடம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கினார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, வேலுச்சாமி உள்ளிட்ட பொறியாளர்கள் இந்த கார்களை வடிவமைத்து முத்திரை பதித்துள்ளனர்.