சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் பத்மஶ்ரீ டி.எம்.சௌந்தரராஜனின் 100வது பிறந்த நாள். இதையொட்டி அவர் வசித்து வந்த பகுதியின் சாலையின் பெயர் மாற்றப்பட்டம் செய்யப்பட்டு உள்ளது. அந்த புதிய பெயர் பலகைகையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார்.

தமிழக திரையுலகில் மறக்க முடியாத ஜாம்பவான்களில் டிஎம்எஸ்-சும் ஒருவர்.  மறைந்த பிரபல நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு, அவர்களுக் கேற்ற குரல்வளத்தில் அருமையாக பாடி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.  சுமார்  10,000-க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இதில் சுமார் 3,000 பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்கள் என பல ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சுமார்  40 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றியவர், வயது முதிர்வு காரணமாக  கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார். இன்று அவரது 100வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி,  டிஎம்எஸ் செளந்தரராஜனை கவுரவிக்கும் வகையில்,.  வசித்த வீடு அமைந்துள்ள மந்தவெளிப்பாக்கத்தின், மேற்குவட்ட சாலையின் பெயர் டி.எம்.சௌந்தரராஜன் சாலை என மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று அந்த சாலையின் பெயர் டிஎம்எஸ் செளந்தரராஜன் சாலை என மாற்றம் செய்யப்பட்டு உள்ளத.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிஎம்எஸ் செளந்தரராஜன் சாலையின் பெயர் பலகையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.