சென்னை: தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியில், நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் முதல் யானைப்பாகன கிராமம் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 2வது யானைப்பாகம் கிராமம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முதல் யானைப்பாகம் கிராமம், முதுமலை புலிகள் வளங்காப்பகமான தெப்பக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த தெப்பக்காடு யானை முகாமில் யானைப் பாகன்களுக்காக என 44 வீடுகள் கட்டப்பட்டு, யானைப் பாகன்கள் கிராமம் அமைக்கப் பட்டுள்ளது. இது இநத் ஆண்டு மே மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யானைப் பாகனங்களுக்கு என இரண்டாவது கிராமத்தையும் அமைந்து, இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். அதன்படி, நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராம் கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் அமைக்கப்பட்டு உள்ளன. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் யானை பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதுரு, யானைப் பாகன்கள், யானைகளைக் கையாளுபவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் ஆகும்.
இதில் அங்குள்ள உள்ளூர் மலசர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களும், யானைகளும் தங்க வைக்கப்படுவர்.
இந்தியாவில் உள்ள வேறு எந்தவொரு யானைகள் முகாம்களில் யானைப் பாகன்களுக்கென எந்த ஒரு மாநில அரசும் வீடுகள் கட்டித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.