சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள  ராணி மேரி பெண்கள் கல்லூரியில்  நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திறந்து வைத்தார்.

சென்னை: ராணி மேரி கல்லூரியில் ரூ.29.70 லட்சம் மதிப்பில் 7 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ரவீந்திரநாத் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த  சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  ரவீந்திரநாத் தாகூரின் உருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, சேகர் பாபு, சாமிநாதன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்கும் பணிக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டையும் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவை போற்றும் வகையில் சென்னை ராணிமேரி கல்லூரியில் அவருக்கான முழு திருவுருவ சிலையானது தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 7 அடி உயரம் கொண்ட சிலையானது 29.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.