சென்னை: சென்னையில் இலகுரக மோட்டார் கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு ரூ. 6.25கோடி மதிப்பில் 145 மோட்டார் கார் வாகனங்களை தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான மற்றும் அலுவலக ஓட்டுனருக்கு தேர்வு நடத்தும் பொருட்டு ரூ.6.25கோடி மதிப்பில் 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளர் பனீந்திர ரெட்டி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

ரூ.24.39 கோடி செலவில் 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள், ரூ.15.46 கோடி செலவில் 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி செலவில் 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், ரூ.20.54 கோடி செலவில் 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்பட பல கட்டிடங்களை திறந்த வைத்தார்.

இதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.   மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டியங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி மன்றக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார்.