சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

சென்னை தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் 5 முக்கிய கோவில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார்.

ஏற்கனவே திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட பல கோவில்களில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 5 கோவில்களில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பன்னாரி அம்மன் கோயில்களில், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோவில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.