சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில்,  776 அடுக்குமாடி நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த குடியிருப்புக்கான ஆணைகளை பயனர்களுக்கு வழங்கினார்.  இதையடுத்து அந்த குடியிருப்புகளை ஆய்வு செய்தவர்,  நகர்ப்புற குடியிருப்புகள்  வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுடன் குதுகலமாக கலந்துரையாடியதுடன், அவர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

[youtube-feed feed=1]