சென்னை: தமிழ்நாடு அரசின் உதவியால் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீஃபன் – சௌபாக்யா தம்பதி. இவர்களின் 9 வயது மகள் தான்யாவுக்கு அரியவகை முகச்சிதைவு நோய் ஏற்பட்டிருந்தது. ஏழ்மையான குடும்பம் என்பதால், அவர்களால், அந் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிரு சிறுமி தான்யாவுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியவில்லை. இது தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தனியார் மருத்துவமனையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ந்தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சுமார் 8 மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அந்த சிறுமி மெல்ல மெல்ல குணமாகி தற்போது சாரதாண குழந்தைகளை போல பள்ளிக்கு சென்று படித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.