சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை இல்லமான சென்னை  பல்லவன் இல்லத்தில் 100 BS-VI பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் பி.எஸ்.6 ரக புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சயில்,  முதலமைச்சர் ஸ்டாலின்  முதற்கட்டமாக ரூ.37.98 கோடியில் 100 பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

தமிழ்நாட்டில்,  அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 1,666 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று  முதற்கட்டமாக 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.