சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பரப்புரையைத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே கடந்த  2011, 2016, 2021 என மூன்று முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், நான்காவது முறையாக இந்த ஆண்டு ( 2026 ) நடைபெற உள்ள தேர்தலிலும்  போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இதையடுத்து, இன்று  கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரான முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வேட்புமனுவை  தாக்கல் செய்தார்.

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  நட்சத்திர தொகுதிகளான கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் , கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்,.

 கொளத்தூர் தொகுதியில்  அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்திர பாண்டியன் லூரர் சேத்தும், தவெக சார்பில் வி.எஸ்.பாபுவும் களமிறங்கி உள்ளனர். இதில் வி.எஸ்.பாபு முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் திமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகரும், பாமக சார்பில் ஒரு வேட்பாளரும், தவெக சார்பில் விஜய்யும், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித் தமிழனும் களமிறங்கி உள்ளனர்.

[youtube-feed feed=1]