சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியின் 9 வயது மகள் தான்யா. இவர் வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது முகத்தில் சிறுவயதில் உருவான ஏற்பட்ட கட்டி காரணமாக, அவரது ஒருபகுதி முகம் சிதைந்தது. இதனால் இந்த சிறுமியை சக மாணாக்கர்கள் ஒதுக்கி வருகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தனது மழலை குரலில், தன்கூட படிக்கும் பிரெண்ட்ஸ்ங்க கூட வெறுக்குறாங்க. உனக்கு இந்த மாதிரி கன்னம் இருக்கு நீ இங்க வந்து உட்காரக்கூடாது. நீ லாஸ்ட்ல போய் உட்காரு’னு சொல்றாங்க. கடைசி பெஞ்ச் இருக்கும் அங்கதான் நான் போய் லாஸ்ட்ல உட்காருவேன். புக்கு கூட எடுத்துட்டு வந்து கைல தரமாட்டாங்க டேபிள் மேலதான் வைப்பாங்க என்று தனது மன வருத்தத்தை கட்டியதுடன், முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரிபண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு” என்று வேண்டுகோள் வித்தார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோரும், முதல்வரும், அரசும் எங்கள் குழந்தையை அரசு மீட்டுத்தர வேண்டும். மற்ற குழந்தைகளை போல எங்கள் குழந்தையும் இருக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.