சென்னை:
லைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர் ஞானதேசிகன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சண்முகம், பொதுப்பணித் துறை மற்றும் எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலர் பழனியப்பன், மின் வாரியத் தலைவர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, மின் உற்பத்தி, மின் வாரியத்தின் நிதி நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மின் நுகர்வோருக்கு, 100யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதாலும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, கூடுதல் மின்சாரம் இலவசமாக வழங்குவதாலும் ஏற்படும் நிதிச்சுமை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், மின் உற்பத்தியை அதிகரிக்க, புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்துவது, பட்ஜெட்டில் மின் வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்தும்
ஆலோசிக்கப்பட்டது.
Tamil_News_large_153216820160530235955_318_219
 
பாராட்டிய முதல்வர்
கடந்த ஏப்ரல் 29ம் தேதி, மின் தேவை, முதல் முறையாக, 15 ஆயிரத்து, 343 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே அளவிற்கு, மின் உற்பத்தி, மின் கொள்முதல் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை. இதற்காக, மின் வாரிய அதிகாரிகளை, நேற்று நடந்த மின் வாரிய ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.
மேலும், தொடர்ந்து தடையில்லாமல் மின்சாரம் வழங்க, அனைத்து பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.