மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளப்பாதிக்களை ஆய்வு செய்த முதல்வர் நிவாரண உதவி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதூர் கிராமத்தில் கனமழையால் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருந்த சம்பா சாகுபடி பயிர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வடகிழக்கு பருவ மழையால் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது, மாவட்டத்தில் 41 கால்நடைகள் உயிரிழந்தது, மற்றும் 90 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கபட்டுள்ளது குறித்தும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்த பயிர்களின் மாதிரிகளும் காட்சிப்படுத்தபட்டிருந்தது. அனைத்து பாதிப்புகளையும் பார்வையிட்ட முதல்வர் அங்கு காத்திருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது பயிர்கள் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த முதல்வர் முழுமையாக ஆய்வு செய்து, நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையம் பகுதியில் மழைநீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட சுவாமி குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இடம் பாதிப்புகள் குறித்தும், கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தார். தரங்கம்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வந்த மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையம் கிராமத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தார்.
அங்கு உள்ள 135 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருட்கள், புடவை போர்வை மற்றும் காய்களை வழங்கினார்.
முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன், பெரியகருப்பன், பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.