சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக நாளை காலை டில்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்குமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சி குறித்து ஆலோசனை செய்ய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டருந்தது.
இந்த கூட்டம் நாளை மாலை டில்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காலை சென்னையில் இருந்து டில்லி செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும்,. பிரதமர் நேரம் ஒதுக்கினால், அவரை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
பிரதமரைச் சந்திக்க முடியாவிட்டால் மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்கவுள்ளதாகவும், . அப்போது காவிரி பிரச்சினை மற்றும் தமிழக தேவைகள் குறித்து விவாதிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்பட மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசவுள்ளார் என தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமரை சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.