சேலம்:

காவிரி நதி நீர் மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்த பின்னரே எதையும் கூற முடியும் என்று நழுவினார்.

கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களையும், மக்கள் நலப்பணிகளையும் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை  சென்னை செல்வதற்காக  சேலம் விமான நிலையம் வந்தபோது செய்தி யாளர்கள் அவரை சந்தித்தனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், உச்சநீதி மன்ற கெடுவான  6 வார காலத்திற்கு முன்னர் எதையும் கூறமுடியாது என்று நழுவலாக கூறி அங்கிருந்து சென்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நழுவல் பேச்சு தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.