சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா கட்டுப்பபாடு களை மேலும் அதிகரிக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, இன்று மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் 20ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும், ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழக தலைமைச்செயலாளர், மாநில அரசின் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்தியஅரசின் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, இன்று மாலை  முதல்வர் பழனிசாமி உடன் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.  அதைத்தொடர்ந்து,  புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை தமிழக அரசு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கொரோனா பரவலை தடுக்க கூட்டம் அதிகமாக உள்ள வார சந்தைகளுக்கு கட்டுப்பாடு, டாஸ்மாக் நேரம் குறைப்பு, மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதி ரத்து, இரவு ஊரடங்கின் நேரம் மேலும் அதிகரிக்கப்படலாம் , சனி, ஞாயிறு முழு ஊரடங்கு,  ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்படுகிறது.