சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களை நிவர் புயல் மிரட்டி வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி வரும் நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி சென்னை அருகே 25ந்தேதி மாலை கரையை கடக்கும் என வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து,  புயல் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. புதிய அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணப்படும் கடலூர் பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புபடையினர் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளநர் பன்வாரிலை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் மற்றும் 7 பேர் விடுதலை,  கொரோனா தடுப்புப் பணி மற்றும் நிவர் புயல் குறித்து  பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.