சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்களை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி இன்றுமுதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
இன்று கிருஷ்ணகிரி செல்லும் முதலமைச்சர், நாளை சேலம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.
அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.
Patrikai.com official YouTube Channel