சென்னை,
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதற்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் 21 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ஆளுநர் இன்று மாலை சென்னை வருகிறார்.
சென்னையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் சந்திக்க உள்ளார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் பெரும்பான்மை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
[youtube-feed feed=1]