தஞ்சாவூர்,

திமுக அம்மாஅணியின் துணைப் பொதுச்செயலார்கள் டிடிவி தினகரன் இன்று அதிரடி பேட்டி அளித்தார். அவருடன் அவரது உறவினரான திவாகரனும் இருந்தார்.

எடப்பாடி அணியினர் டிடிவியை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி  தினகரன் முதல்வர் எடப்பாடி ஒரு 420 என்று கடுமையாக தாக்கி பேசினார்.

அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி  தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது என்ற அவர்,  ஜெயலலதா காலத்திலேயே பொருளாளர் பதவியை வகித்தவன் நான் என்று கூறினார்.

கட்சியை நிர்வகிக்க  பொதுச்செயலாளருக்கே அதிகாரம். அவர் செயல்படாத நிலையில் துணைப்பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் என்று கூறினார்.

தற்போது ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் இருக்கும் வரை இருநதுகொண்டு, கிடைத்ததை சுட்டுபவர்கள்தான் என்று குற்றம் சாட்டிய டிடிவி, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட  பிரமாணப் பத்திரத்தில், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று குறிப்பிட்டதிற்கு முரணாக, தற்போது பேசுபவர்கள் 420 என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.

எடப்படி அணியினர்  மடியில் கனம் இருப்பதால் தற்போது அச்சப்படுகின்றனர். யாரோ ஒரு சிலருக்காக எனது பயணம் நிற்காது. நேற்று முளைத்த காளான்களக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறினார்.

அதிமுக அம்மாஅணி துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் எடப்பாடி மற்றும்  அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி அணியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.

மேலும், துணைப்பொதுசெயராளக நான் செயல்பட எந்தவித தடையும் இல்லை என்று கூறிய டிடிவி,  தொண்டர்களின் விருப்பத்திற்க ஏற்ப பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

டிடிவியின் இன்றைய நேரடி தாக்குதல் குறித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.