டில்லி

மிக்ரான் காரணமாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது எனவும் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், உத்தரப்பிரதேசம்,  பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உளது.  தற்போது நாடெங்கும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தேர்தல்களைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.  அலகாபாத் உயர்நீதிமன்றமும் இதை வலியுறுத்தியது.

இதையொட்டி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 நாட்கள் ஆய்வு நடத்தினார்.  பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் ஒமிக்ரான் காரணமாகச் சட்டப்பேரவை தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட மாட்டாது எனவும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளனர். அதன்படி வரும ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன..

சுமார் 1 லட்சம் வாக்குச் சாவடிகளில் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக  நேரடி இணைய ஒளிபரப்பு வசதிகள் இருக்கும்.  ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.