சென்னை:
அமெரிக்காவின் சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து அரசாணை வெளியிட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 3ந்தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டு இருப்பதாக அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளைஉலத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், வடஅமெரிக்கா தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து செய்துள்ளன. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்து பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள் என பல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நெதர்லாந்து என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 8 ஆயிரம் தமிழறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழக அரசு, உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாட்டிற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த 9 உலகத் தமிழ் மாநாட்டுக்கும் தமிழக அரசு நிதி உதவி வழங்கி நிலையில், 10-வது மாநாட்டுக்கும் ரூ.5 கோடி நிதி வழங்க முடிவு செய்திருந்ததாகவும், ஆனால், அதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்காத நிலையில், தற்போது ரூ.1 கோடி நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.