பிஜப்பூர்:
சட்டீஸ்கர் மாநிலத்தில் சக வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸகூடா பகுதியில் சக வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சக வீரரை துப்பாக்கியால் சுட்ட நபர் அடையாளம் காணப்பட்டது. அவரது பெயர் சாந்த் ராம் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சக வீரர்களை திடீரென துப்பாக்கியால் சுட்டது பாதுகாப்பு படை வீரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel